ஜனநாயக உரிமை கோரி பிரேசில் அதிபர் பொல்சோனாரோவுக்கு எதிராகக் கால்பந்து ரசிகர் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று போராட்ட பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமரின் ஆதரவாளர்கள் எதிர் திசையில் பேரணியாக வந்துகொண்டிருந்தனர்.
இதனிடையே, போராட்டக்காரர்களைக் கண்ட அதிபரின் ஆதரவாளர்கள் உணர்ச்சிப் பெருக்கில் போராட்டக்காரர்களுடன் மோத முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் நின்று கொண்டிருந்த காவல் துறையினர் இரு தரப்பினர் மீதும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை அங்கிருந்து களையச் செய்தனர். இதனால் வீதிகள் போராட்டக் களமாகக் காட்சியளித்தன.
சம்பவம் குறித்து காவல் துறை உயர் அலுவலர் அல்வாரோ பட்டிஸ்டா கமிலோ கூறுகையில், "நவீன-நாஜி கொடிகளுடன் பிரதமரின் ஆதரவாளர்களுக்கு எதிர்தரப்பினருடன் மோதல் நேர்ந்தபோது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி இரு தரப்பினரும் அங்கிருந்து களையச் செய்தோம். பிரதமருக்கு எதிரான போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதில் காலம் தாழ்த்தியதால் அவர்கள் மீது அதிக புகை குண்டுகள் வீசப்பட்டன" என்றார்.
பிரேசிலில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வரும் சூழலில், இந்த போராட்டமானது நிகழ்ந்துள்ளது.
இதனிடையே, ஃபேவ்லாஸ் என்ற பகுதிகளில் கறுப்பின மக்களுக்கு எதிராக அராஜக போக்கை கையாள்வதைக் காவல் துறையினர் நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி ரியோ டி ஜெனிரோ மாநில அரசு மாளிகையின் முன்பு ஏராளமான கறுப்பின மக்கள் குவிந்தனர்.
கடந்த மாதம் 18ஆம் தேதி, ஃபேவ்லாஸ் பகுதியில் பிரேசில் காவல் துறையினரின் அதிரடி சோதனையின் போது, ஜாவோ பெத்ரோஸ் என்ற 14 வயது கறுப்பின சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதுபோன்ற அராஜக வேளையில் ஈடுபடுவதைக் காவல் துறையினர் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க : உச்சமடையும் போராட்டம்... பதுங்கு குழிக்குள் ட்ரம்ப்