ஏதேனும் ஒரு துறையில் குறிப்பிடத்தக்க அளவுக்கான சாதனைகளைப் புரியும் சர்வதேச தலைவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிப்பது பில்கேட்ஸ் அறக்கட்டளையின் வழக்கம்.
அந்தவகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த தூய்மை இந்தியா (Swach Bharat) திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆண்டுக்கான பில்கேட்ஸ் அறக்கட்டளையின் சர்வதேச கோல்கீப்பர் ('Global Goalkeeper's Award') விருதுக்கு மோடி தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச கோல்கீப்பர் விருதை பில்கேட்ஸ் வழங்கி கெளரவித்துள்ளார்.
இதையும் படிங்க: நியூயார்க்கில் மீண்டும் ட்ரம்ப்புடன் மோடி சந்திப்பு!