அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை விமர்சித்து அந்நாட்டு முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் 'த ரூம் வேர் இட் ஹேப்பன்ட்' (The Room Where It Happened) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம், ட்ரம்ப் நிர்வாகத்தின் ரகசியங்கள், முறைகேடுகளை அம்பலப்படுத்தும் என்று பரவலாக பேச்சுகள் எழுந்துள்ளன.
இந்தப் புத்தகத்தின் வெளியீடு நாளை (ஜூன் 23ஆம் தேதி) நடக்கவிருந்தது. இதற்கிடையில், புத்தகத்தின் மின் படிவம் (PDF) திருட்டுத்தனமாக இணைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து புத்தகத்தின் மின் படிவத்தை இணையத்திலிருந்து நீக்கும் முயற்சியில் சைமண் அண்ட் ஸ்கியூமர் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க : மினியாபோலிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் படுகாயம்