சர்வதேச அளவில் கோவிட்-19 பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்தச் சூழலில், கரோனா பரவலுக்கு எதிராக போராடும் வகையில் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவதைத் தடை செய்யும் மசோதாவை பனாமா நாட்டிலுள்ள ’குண யால’ என்றழைக்கப்படும் ஓர் இனக்குழு மக்கள் நிறைவேற்றியுள்ளனர். இச்சட்டத்தின் மூலம் குண யால மக்கள் வசிக்கும் பள்ளி, அரசு அலுவலங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை.
பனாமா நாட்டிலுள்ள சிறு தீவுகளில் வாழும் மக்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பொதுசுகாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்களால் இது போன்ற சட்டங்களை இயற்ற முடியாது என்றும். இச்சட்டம் தவறுதலாக இயற்றப்பட்ட ஒரு சட்டம் என்றும் பனாமா நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து Ngabe Buglé என்ற மற்றொரு இனக்குழு உறுப்பினரான பலாசியோ கூறுகையில்,"அரசு அலுவலர்கள், பனாமா நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான தாவர அடிப்படையிலான சிகிச்சை முறைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற கோபத்தில், அவர்கள் இதுபோன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்: தீவிரவாதிகளை விடுவிக்க மாலி அரசு திட்டம்