ETV Bharat / international

"தேர்தலில் நான்தான் வென்றேன்" - தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அடம்பிடிக்கும் ட்ரம்ப்! - அமெரிக்க அதிபர் தேர்தல்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாள்கள் கடந்துள்ள நிலையில், அதிபர் தேர்தலில் தான் வென்றதாக ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

Trump
Trump
author img

By

Published : Nov 16, 2020, 8:41 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மைக்குத் தேவையான 290 எலக்டோரல் காலேஜ் வாக்குகளைவிட அதிகம் பெற்று அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுப்பட்டார்.

இருப்பினும், ஜோ பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்கிய அதிபர் ட்ரம்ப், தனது தோல்வியை ஒப்புகொள்ளவில்லை. பென்சில்வேனியா, நெவாடா, மிச்சிகன், ஜார்ஜியா, அரிசோனா ஆகிய மாகாணங்களின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள அவர், தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் ட்ரம்ப் இன்று (நவ.16) ட்விட்டரில் மீண்டும், "தேர்தலில் நான்தான் வென்றேன்" என்று பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ட்வீட் போலியானது என்பதை எச்சரிக்கும் வகையில், ட்விட்டர் அதனை ஃப்ளேக் (Flag) செய்துள்ளது.

நேற்று (நவ.15) காலை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவர் போலி ஊடகங்கள் பார்வையில் மட்டுமே வென்றார். நான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை! நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இது ஒரு கடுமையான தேர்தல்!" என்று ஜோ பைடன் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் தொடர்ந்து இதுபோன்ற ட்வீட்களை பதிவிட்டு வருவது குறித்துப் பேசிய பைடனின் பரப்புரை பிரிவுத் தலைவர் ரான் க்ளெய்ன், "ட்ரம்பின் ட்வீட்கள் ஜோ பைடனை அமெரிக்க அதிபராக ஆக்காது. அமெரிக்க மக்களின் வாக்குகள்தான் ஆக்கும். அதை அமெரிக்க மக்கள் ஏற்கனவே செய்துவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனும், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸும் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது" - ஒபாமா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.