நியூயார்க்: ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியமுடியாத குணம் கொண்டவர் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளியிட உள்ள தனது அரசியல் நினைவுக் குறிப்பான "வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land) என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்களை குறித்து குறிபிட்டுள்ளார்.
அதில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் அமெரிக்கா, பிற நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் குறித்தும் கருத்து தெரித்துள்ளார். இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் ஆகியோரும் அடங்குவர்.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருந்தபோது, ஒபாமா அமெரிக்கவின் அதிபராக இருந்தார். இவர் தனது புத்தகத்தில், “பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருவிதமான
ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
"ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியமுடியாத குணம் கொண்டவர். அவர் ஒரு மாணவராக இருப்பதால், சிலவற்றை கற்று ஆசிரியரைக் கவர ஆர்வமாக இருந்தார். ஆனால் எதிலும் ஆழமான சிந்தனையை அவர் கொள்ளவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 2017 இல் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, அவரைச் சந்தித்தார். மீண்டும் அவரைச் சந்திக்க ஆர்வமாக உள்ளேன் என்றும், அதிபர் ஒபாமா அருமையான மனிதர் என்றும் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்துடன் அச்சமயத்தில் ராகுல் ட்வீட் செய்திருந்தார்.