அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பின் பதவிக்காலமான நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்தாண்டு இறுதியில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்கா திணறிவரும் நிலையில், தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்புக்கு எதிராக குடியரசு கட்சியில் ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜோ பைடனுக்கு போட்டியாக இருந்த மற்றொரு குடியரசு கட்சி வேட்பாளர் வெர்னி சான்டர்ஸ் கடந்த வாரம் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். இதையடுத்து ஜோ பைடனுக்கு குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள காணொலியில், நாடு இதுபோன்ற சிக்கலைச் சந்தித்துவரும் இக்கட்டான சூழலில், சிறந்த நிர்வாகத் திறனும், மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட தலைமையும் தேவைப்படுகிறது. ஜோ பைடனுக்கு மேற்கண்ட அனைத்து தகுதிகளும் உண்டு, நாட்டை இதுபோன்ற சூழலில் வழிநடத்த அவரே சிறந்த நபர் எனத் தெரிவித்துள்ளார்.
ஒபமாவின் ஆட்சியில் துணை அதிபாரக ஜோ பைடன் செயல்பட்டுள்ளார். ஜோ பைடனை துணை அதிபாரக தேர்தெடுத்தது தான் மேற்கொண்ட முடிவுகளில் சிறந்தது என ஒபாமா பைடனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இனி நிதி கிடையாது; உலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் செக்