ETV Bharat / international

பத்தாண்டுகளாக வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்!

author img

By

Published : Sep 28, 2020, 9:17 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பத்தாண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. இவர் இறுதியாக 2016-17ஆம் ஆண்டில் 750 அமெரிக்கன் டாலர் மட்டுமே வருமான வரியாகச் செலுத்தியுள்ளார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறுகையில், டொனால்ட் ட்ரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம், பிற உரிமை ஒப்பந்தங்களிலிருந்து 2018ஆம் ஆண்டுக்குள் 7, 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தார்.

கடந்த 15 ஆண்டுகளில் பத்தாண்டுகள் அவர் வரி செலுத்தவில்லை. 2016, 2017ஆம் ஆண்டுகளில் கூட்டாட்சி வருமான வரிகளில் 750 அமெரிக்கன் டாலர்கள் மட்டுமே செலுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தனது வணிக சாம்ராஜ்யம் முழுவதும் பெரும் இழப்புகளை சந்தித்துவருவதாக கூறி வருமான வரியை குறைத்துக்கட்டியுள்ளார். 2018ஆம் ஆண்டில், ட்ரம்ப் 47.4 மில்லியன் டாலர் இழப்பை கோரியதாகவும் ஆனால் அந்த ஆண்டு வெளியான நிதி அறிக்கையில் குறைந்தபட்சம் 4,434.9 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது.

ட்ரம்ப் அவரது வணிக நிறுவனத்தில் உள்ள நிறுவனங்களுக்காக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வரிவிதிப்பு தரவை பெற்றுள் நியூயார்க் டைளது.

அதில், 2018-2019ஆம் ஆண்டு முதல் அவர் பெற்ற தனிப்பட்ட வருமானம் குறித்த தகவல்கள் இல்லை. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நிலையான நடைமுறையிலிருந்து விலகி தனது வரிகளை வெளியிட ட்ரம்ப் தொடர்ந்து மறுத்துவருகிறது என செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், வெள்ளை மாளிகையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ட்ரம்ப் இந்தச் செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். அதுமட்டுமல்லாது இது போலியான செய்தி.

உண்மையில், எனக்கு கிடைத்த வருமானத்திற்கு நான் வரி செலுத்தி உள்ளேன். அது தணிக்கைக்கு உட்பட்டது என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ட்ரம்ப் நிறுவனங்களின் வழக்கறிஞரான ஆலன் கார்டன் அளித்த அறிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப் அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார். இதில் 2015ஆம் ஆண்டு தனது வேட்புமனுவை அறிவித்ததிலிருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை செலுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.