ETV Bharat / international

அமெரிக்காவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இந்தியர்கள் கார் பேரணி! - அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ

வாஷிங்டன்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக சான் பிரன்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கார் பேரணி நடத்தினர்.

அமெரிக்காவில் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக இந்தியர்கள் கார் பேரணி!

author img

By

Published : Feb 23, 2021, 8:21 AM IST

உழவர்கள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்ப மற்றும் வசதி), உழவர்கள் ஒப்பந்தத்தின் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மீதான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள், இன்றியமையாத பொருள்கள் (திருத்தம்) ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இதற்குப் பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உழவர்கள் மூன்று மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நேற்று (பிப். 22) கார் பேரணி நடத்தினர். மதியம் 1.30 மணிக்கு மிஷன் ஷன் ஜோஸ் உயர்நிலைப் பள்ளியின் முன்பு தொடங்கிய கார் பேரணியில், ஆதரவாளர்கள் ‘வந்தே மாதரம்’ எனக் கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.

இது குறித்து பேரணியில் கலந்துகொண்டவர் கூறுகையில், “இந்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம். இது முன்னேற்றத்திற்கான பாதையாகும்” என்றார்.

இதையும் படிங்க...‘3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும்’ - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.