வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை தான் இந்த வருடத்துக்குள் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செப்.13ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், " வடகொரியா செல்வதற்கு இது சரியான தருணம் இல்லை" என்று கூறியதாக யொஹாப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடந்த ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து, வட-தென் கொரிய எல்லையில் வைத்து வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உன்னை, அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, கிழக்குக் கடலில் ராணுவக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க தென் கொரியாவை கண்டிக்கும் வகைியில் தொடர்ந்து ஒரு மாத காலம் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. எனினும், இதனால் தங்களுக்கு இடையேயான உறவு சீர்கெடவில்ல என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.