ETV Bharat / international

கரோனா பாதிப்பு: நியூயார்க்கில் திரும்பும் நம்பிக்கையின் கீற்று - new york governor andrew cumco

கரோனா பாதிப்பால் பரிதவித்துவந்த நியூயார்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் விரைவில் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

New York
New York
author img

By

Published : Apr 19, 2020, 1:20 PM IST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கரோனா பாதிப்பு வரலாறு பேரிடராக உருவெடுத்துள்ளது. 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுரத் தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வலைகளைக் காட்டிலும் அதிமான தாக்கத்தை கரோனா ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கரோனா பாதிப்பு மையப்பகுதியாக நியூயார்க் நகரம் மாறியது. இதுவரை வைரஸ் பாதிப்பின் காரணமாக நியூயார்க்கில் மட்டும் 2.4 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சுமார் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நியூயார்க் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ கும்கோ நேற்று (ஏப்ரல் 18) செய்தியாளர் சந்திப்பின் போது நம்பிக்கைதரும் செய்தியை வெளியிட்டார். நோய் தீவிரம் ஏற்படத் தொடங்கிய 15 நாட்களில் முதல்முறையாக கரோனா பாதிப்பின் காரணமாக 24 மணிநேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 550க்கும் குறைவாக பதிவாகியுள்ளது நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவந்த நிலையில் தற்போது நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து நிலைமை சீராகியுள்ளதாக கும்கோ தெரிவித்துள்ளார்.

வரைஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று குணம் பெறுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிப்பது நம்பிக்கை தெரிவிப்பதாக ஆளுநர் கும்கோ தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரமலான் மாதத்தில் மசூதிகள் திறந்திருக்கும்: பாகிஸ்தான் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.