உலகப் பெருந்தொற்றான கரோனா கடந்த மூன்றுமாத காலமாக உலகையை உலுக்கிவருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா, தற்போது தென் அமெரிக்க நாடுகளிலும் தீவிரமாகப் பரவிவருகிறது.
குறிப்பாக, தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கரோனா பாதிப்பு தற்போது மிக மோசமாகப் பரவிவருகிறது. அங்கு வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளும் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
அந்நாட்டில் இதுவரை 6.15 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தப்படியாக அதிகளவில் உயிரிழப்பைச் சந்தித்துள்ள நாடாக தற்போது பிரேசில் உருவெடுத்துள்ளது.
அந்நாட்டின் அதிபர் போல்சனாரோ, கோவிட் -19 பாதிப்பைக் கையாளும் விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரிசோதனை, ஊரடங்கு விவகாரம் என முக்கிய அம்சங்களில் போல்சனாரோ பொறுப்பற்ற முறையில் செயாலாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா - தலிபான் தாக்குதலில் ஆப்கான் காவலர்கள் 10 பேர் உயிரிழப்பு