சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா எனும் பெருந்தொற்று உலக நாடுகளைச் சூறையாடி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் இந்த நோயின் தாக்கம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இதனைச் சமாளிக்க போதிய மருத்துவ, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் அமெரிக்கா திணறிவருகிறது. இந்தச் சூழலில், அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கலிஃபோர்னியா மாகாண கரோனா தடுப்பு பணிக்குழுவுடன் சேர்ந்து மருத்துவ உபகரணங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து நாசா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆன்டிலோப் வேலி மருத்துவமனை, லாண்செஸ்சர் நகரம், வெர்ஜின் கெலக்டிக் நிறுவனம், தி ஸ்பேஸ் கம்பெனி, ஆன்டிலோப் வேலி கல்லூரி ஆகியவற்றுடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங் விமான ஆராய்ச்சி மையம் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக, ஆக்சிஜன் வழங்கும் கருவியின் முதல் மாதிரியை உருவாக்க இக்கூட்டணி திட்டமிட்டுள்ளது. ஒரு வாரத்தில் இந்தக் கருவிகள் உருவாக்கும் பணி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பெண் ராணுவ அலுவலருக்கு கரோனா பாதிப்பு