ETV Bharat / international

ஊக்கமளித்த இஸ்ரோ! - வாழ்த்து தெரிவித்த நாசா - இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து

வாஷிங்டன்: நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோ மேற்கொண்ட பெரும் முயற்சிகளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது.

nasa appreciate isro
author img

By

Published : Sep 8, 2019, 9:21 AM IST

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை எந்த நாடுகளும் மேற்கொள்ளாத பெரும் முயற்சியை சந்திரயான் 2 விண்கலம் மூலம் காண முற்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவின் தென்பகுதியினை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட தனது வெற்றி இலக்கை எட்டியுள்ளது.

இது குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்ரோ விக்ரம் லேண்டரை தரையிறக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த விண்வெளி ஆய்வு மிகவும் கடினமானது.

இதுவரை யாரும் முயற்சிக்காத சந்திரயான் 2 திட்டத்தின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள். இந்த திட்டத்தின் மூலம் எங்களது ஆராய்ச்சிகளுக்கு நீங்கள் ஊக்கமளித்துள்ளீர்கள். மேலும், சூரியனை ஆராய்ச்சி செய்யும் அடுத்த திட்டத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.

இதற்குமுன், நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ், சந்திரயான் 2 திட்டத்திற்கு வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சந்திரயான் 2 முன்னேற்ற பாதையில் இஸ்ரோ: டான் தாமஸ்

Intro:Body:

nasa appreciate isro 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.