ETV Bharat / international

வடகொரிய ஹேக்கர் கும்பல்கள் ஏடிஎம்களை சூறையாடுகின்றன - அமெரிக்கா குற்றச்சாட்டு! - வடகொரியா ஹேக்கர் கும்பல்கள்

வாஷிங்டன் : வடகொரிய அரசிடம் மறைமுகமாக பணியாற்றும் ஹேக்கர்கள் சிலர், அணு ஆயுதத் திட்டத்திற்கு நிதி திரட்ட, உலக அளவில் பல ஏடிஎம்களில் கொள்ளையடித்து வருவதாக அமெரிக்க ஃபெடரல் ஏஜென்சிக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

hacj
hack
author img

By

Published : Aug 27, 2020, 9:22 PM IST

வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கும்பல், திருட்டு முதல் மால்வேர் வைரஸ் அனுப்புவது வரை நூதன முறையில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, ஒரு வட கொரிய ஹேக்கிங் குழு மூன்று டஜன் நாடுகளின் ஏடிஎம்களிலிருந்து, கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர்களை திருட முயற்சித்துள்ளது. பல வங்கிகளில், எடிஏம்களை காலியாக்கியதும் நடக்கும் பணப்பரிமாற்ற சமயத்தில் திருட்டு வேலைகளில் வட கொரிய ஹேக்கர்ஸ் மும்முரமாக ஈடுபடுகின்றனர். இதுமட்டுமின்றி ஸ்பியர்-ஃபிஷிங் தாக்குதல் அதிக அளவில் நடைபெறுகிறது. மின்னஞ்சல்கள் அனுப்பவதன் மூலம் எளிதாக கணினிகளில் ஊடுருவி தரவுகளைத் திருடுகின்றனர்.

இது குறித்து சைபர் செக்யூரிட்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி (CISA), கருவூலத் துறை (Treasury department), பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) வெளியிட்டுள்ள கூட்டு எச்சரிக்கையில், " பிப்ரவரி மாதம் முதல், வட கொரியா சர்வதேசப் பணப்பரிமாற்றம் மூலமாகவும், ஏடிஎம் பணமதிப்பிழப்பு மூலமாகவும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட பல நாடுகளின் வங்கிகளைக் குறி வைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்துப் பேசிய சிஐஎஸ்ஏவின் சைபர் பாதுகாப்பு உதவி இயக்குனர் பிரையன் வேர் , "வட கொரிய இணைய ஹேக்கர்ஸ், சட்டவிரோத இணைய நடவடிக்கைகளின் மூலம் நிதித் துறையையும், வேறு பல துறையையும் சுரண்டுவதற்கான தந்திரங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்" என விமர்சித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எஃப்.பி.ஐயின் சைபர் பிரிவின் உதவி இயக்குனர் மாட் கோர்ஹாம், "இணைய வழி ஹேக்கர்களை தடுப்பதற்கான முயற்சியில் நாங்கள் அனைவரும் களமிறங்கியுள்ளோம். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.