2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், பல கருத்துகணிப்புகளை பொய்யாக்கும் விதமாக வெற்றி பெற்றார் குடியரசு கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப். அப்போதே அதிபர் ட்ரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெற ரஷ்ய உதவியை நாடியதாகவும் அவருக்கும் ரஷ்ய உளவு துறைக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உலவி வந்தன.
இந்த சந்தேகங்கள் குறித்து விசாரணை நடத்த அலுவலர் ராபர்ட் முயூலர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது, தற்போது இந்த விசாரணை முடிவடைந்துள்ளது.
இவன் அவ்வளவு நல்லவன் இல்லையே ?
முதன் முதலில் ட்ரம்ப் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது எதிர்கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் தான். 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போதே ஹிலாரி கிளிண்டன் தன் பரப்புரை மேலாளரின் ஈ-மெயில்கள் ரஷ்ய உளவுதுறையால் ஹேக் செய்யப்படுவதாக கூறினார். ஆனால் அப்போது கூட ட்ரம்ப் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
நான் நல்ல பண்றேனோ இல்லையோ நீ நல்லா பண்றடா
மற்றும் ஒரு தேர்தல் நிகழ்வில், 2016-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் 20,000 ரஷ்ய ஈ-மெயில்களைஅமெரிக்க அரசுஹேக் செய்ததை அப்பட்டமாக வெளியிட்டது. ஆனால் இந்த வெளியீட்டு விழாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இந்த செய்திகளை ஒரு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உளறி ட்ரம்பை சிக்க வைத்தார், ட்ரம்பின் தேர்தல் பரப்புரை ஆலோசகர்.
இருந்தும் இந்த தேர்தலில் எப்படியோ வெற்றிபெற்ற ட்ரம்ப், அதிபரான பிறகு ரஷ்ய அதிபர் புதினுடன் பாராட்டிய நட்பு இந்த சந்தேகத்தை வலுவாக்கியது. இது முதற்கொண்டே டிரம்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையே என்ன உறவு என்று தோண்ட தொடங்கியது சிஐஏ அமைப்பு.
கடைசியாக தான் வந்து சேர்ந்தார் விநாயக் மகாதேவ்
இதுபோன்ற பல குற்றசாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கதான் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, முயூலர் இதனை விசாரிக்க தொடங்கினார். இரண்டு ஆண்டுகளாக 34 ரஷ்யர்கள், 3 ரஷ்ய நிறுவனங்கள் அது தவிர இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க அலுவலர்களை அழைத்து விசாரித்த முயூலர், பத்திரிகையாளர்களை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. சுமார் 22 மாதங்கள் இதுதொடர்பாக மவுனம் காத்தார்.
காத்திருந்து காத்திருந்து கால்களும் நோகுதடி
அமெரிக்க பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து உலகமே ஆவலுடன் ஃபுளோரிடாவில் முயூலரின் வீட்டு வாசலில் காத்திருந்தது. சமூக வலைதளங்களில் அமெரிக்க மீம் படைப்பாளிகள் முயூலரின் ஆமை வேகத்தைகலாய்தனர்.
ஒருவழியாக நேற்று தன் விசாரணை அறிக்கையை தலைமை அரசு வழக்கறிஞர் வில்லியம் பாரிடம் அளித்தார் முயூலர். அந்த விசாரணை அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது இன்று வரை ரகசியம் காக்கப்படுகிறது.
"சூனா பானா!... சிக்குவன நானு"
ட்ரம்ப் - ரஷ்ய ரகசிய உறவு குறித்து உலகை அதிர்ச்சியளிக்கக்கூடிய பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தலைமை அரசு வழக்கறிஞர் வில்லியம் பார் 'எந்த விதமான வலுவான ஆதாரங்களும் இல்லை' என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வில்லியம் பார் தன் அறிக்கையில், 'முயூலர் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணையில் ட்ரம்போ அவரது தேர்தல் பரப்புரை அதிகாரிகளோ ரஷ்யாவுடன் சந்தேகத்துக்கிடமான எந்த ஒரு தொடர்பும் வைத்திருப்பதாக நிரூபிக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "முயூலர் அளித்துள்ள அறிக்கையின்படி ட்ரம்ப் குற்றவாளி என்பது நிரூபிக்கப்படவில்லை, அதே சமயம் களங்கமற்றவர் என்பதும் நிரூபிக்கப்படவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.