உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கரோனா வைரஸ் பிடியிலிருந்து மீண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாக அமெரிக்கா, இந்தியா உள்ளன.
இந்நிலையில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 11ஆம் இடத்தைப் பிடித்துள்ள மெக்சிகோ இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான கரோனா உயிரழப்புகளை சந்தித்துள்ளது.
இதையடுத்து கரோனா உயிரிழப்புகளில் ஒரு லட்சத்தைக் கடந்த நான்காவது நாடாக முன்னேறியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும் மெக்சிகோ இயற்கைப் பேரிடர்களையும், மனித வன்முறைகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது. இது அந்நாட்டிற்கு மேலும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: மெக்சிகோ: மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் உயிரிழப்பு