ETV Bharat / international

அசுர வேகத்தில் சென்ற ரோலர் கோஸ்டர்: கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேர் உயிரிழப்பு! - roller coaster crash

மெக்சிகோ: பொழுதுபோக்குப் பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரோலர்கொஸ்டர்
author img

By

Published : Sep 30, 2019, 10:17 AM IST

மெக்சிகோவில் இயங்கிவரும் மிகவும் பிரபலமான பொழுதுபோக்குப் பூங்கா லா ஃபெரியா. இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கான சிறப்பு சாகச விளையாட்டுகளும் அதிகளவில் இருக்கின்றன.

நேற்று விடுமுறை நாள் என்பதால் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அப்போது ரோலர் கோஸ்டர் சவாரியில் பலர் பயணித்தனர்.

  • #VIDEO: Momento del accidente en el parque de diversiones "La Feria de Chapultepec" que dejó 2 muertos y 5 heridos al descarrilar carro del juego mecánico "Kimera" en la Ciudad de México. pic.twitter.com/52oAQ4MQo1

    — Anonymous Hispano (@anonopshispano) September 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அசுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரோலர் கோஸ்டரின் கடைசிப் பகுதி தண்டவாளத்திலிருந்து வெளியே சென்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அதில் பயணித்தவர்கள் பயத்தில் கூச்சலிடத் தொடங்கினர். அப்போது, ரோலர் கோஸ்டரிலிருந்து இரண்டு பேர் கீழே தவறி விழுந்ததாக அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து உடனடியாக சுற்றுலாப் பயணிகள் பூங்காவை வீட்டு வெளியேற்றப்பட்டனர். இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளது சுற்றுலாப் பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: இலங்கையில் ஏழு யானைகள் மர்மமான முறையில் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.