அமெரிக்காவில் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் மாயா ஏஞ்சலினா. இவர் கற்பனை கதைகள் எழுதுவதில் வல்லவர்.சமுதாய நலனுக்காக மிகவும் பாடுபட்டார். மேலும், கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர்,ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர்.
அமெரிக்காவில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட இனவெறி தாக்குதல், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து மீண்டு வந்து எழுத்துலகில் சாதித்த கதையை ‘கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்கு தெரியும்’ என்ற தனது சுயசரிதையில் விரிவாக எழுதியுள்ளார்.
மாயா ஏஞ்சலோவுக்கு, இந்த புத்தகம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்று தந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது மாயா ஏஞ்சலாவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தற்போது, அமெரிக்க அரசு ¼ டாலர் நாணயத்தில் மாயா ஏஞ்சலினா உருவப்படத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இது கருப்பின பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. மாயா ஏஞ்சலினா கடந்த 2014ஆம் ஆண்டு தனது 86ஆவது வயதில் காலமானார்.
அமெரிக்க வரலாற்றிலேயே கருப்பின பெண்ணின் உருவமும், பெயரும் நாணயத்தில் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க : நியூயார்க்கில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் தீக்கிரை!