அமெரிக்காவின் மினிசோடா மாகாணத்தில் ஜார்ஜ் எனும் கறுப்பின அமெரிக்கர், உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அந்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இப்போராட்டங்களுக்கு இடையே அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி. நகரில் இந்திய தூதரகத்திற்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவமதித்துள்ளனர். இதையடுத்து, ஆதாரங்களின் அடிப்படையில், வாஷிங்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, இது தொடர்பாக, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் மன்னிப்புக்கோரியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் நிறவெறி படுகொலை: ஆஸியிலும் படர்ந்த போராட்டம்!