உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 210க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 47லட்சத்து 37 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 13 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பரவி தீவிரமடைந்துக் கொண்டிருக்கிறது. கோவிட்-19 வைரஸ் பரவலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென ஐ.நா மன்றம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய தலைவர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தலைமையில் 73ஆவது உலக சுகாதார ஒழுங்கு கூட்ட அமர்வு நேற்று (மே 16) மெய்நிகர் காணொலி சந்திப்பு நடைபெற்றது. இதில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகளின் சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய தென்கிழக்கு ஆசிய பிராந்திய தலைவர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், “சீனாவிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் முதல் பாதிப்பு ஜனவரி 13ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்டது. முன்னெப்போதும் கண்டிராத இந்த நோயை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தியது. உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த அந்த அரசின் பணிகளை நாம் கவனிக்க வேண்டும்.
இப்போது, தெற்காசிய நாடுகளின் கோவிட்-19 வைரஸின் தாக்கம் குறித்த புரிதல், சிவப்பு குறியீட்டு பகுதிகள், தீவிர பாதிப்பிற்குள்ளான இடங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உலகளவில் மாற்று சமூக, பொருளாதார வாழ்க்கை ஒரு ‘புதிய இயல்பு’க்கு மாறுவதற்கு அனைத்து நாடுகளும் இப்போது தயாராகி வருகிறது. முழு அரசாங்கமும், சமூகத்தின் முழு அணுகுமுறையும் தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும்.
தெற்காசிய அளவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பாதிப்பு அதிகரித்து வருகின்ற பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பல்வேறு கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு அத்தியாவசியமான உதவிகளை தங்களுக்குள் செய்துகொள்ள வேண்டும்.
விரைவாக கண்டறிதல், சோதனை செய்தல், தனிமைப்படுத்துதல், கவனிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் இந்த ஒத்துழைப்பை புரிந்துணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளலாம்.
வரவிருக்கும் காலகட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், தாக்கத்தைக் குறைக்கவும், சுகாதார சேவை அணிகளை வலுப்படுத்தவும், நாட்டின் சுகாதாரத்தை பராமரிக்கவும், பாதுகாப்பாகவும் தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
செப்டம்பர் 2019ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியா உறுப்பு நாடுகள் பிராந்தியத்தில் தயாரிக்கப்பட்ட அவசரகாலம் குறித்த டெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன. இந்த அணுகுமுறை பிராந்தியத்தில் பயன்படுத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம்.
இந்த அறிவிப்பில் நான்கு மையக் கருத்துகள் உள்ளன: அபாயங்களைக் கண்டறிதல், இடர் மேலாண்மைக்கான மக்கள் மற்றும் அமைப்புகளில் முதலீடு செய்தல், திட்டங்களை செயல்படுத்துதல், இதற்கான இணைப்பு துறைகளை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் இந்த பிராந்தியமானது, சமமற்ற நோய் சுமை, அதிக மக்கள் தொகை அடர்த்தி, நகர்ப்புற சேரிகள், இடம்பெயர்ந்த குழுக்கள், சமூக-பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இருக்கிறோம். அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் உலகளாவிய பற்றாக்குறைக்கு இவற்றை எல்லாம் கடந்து நாம் கரோனாவை வெல்லுவோம் என்பது மட்டும் உறுதி”என்றார்.
இதையும் படிங்க : ஊடரங்கு தளர்வு: விமான போக்குவரத்தை தொடங்குகிறது பாகிஸ்தான்