ETV Bharat / international

லஷ்கர்-இ-தொய்பாவும் பாகிஸ்தான் உளவு அமைப்பும் ஒன்றுதான்! - லஷ்கர்-இ-தொய்பாவும் பாகிஸ்தான் உளவு அமைப்பும் ஒன்றுதான்

வாஷிங்டன்: பாகிஸ்தான் உளவு அமைப்பின் பிரதிநிதி போல லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இயக்கம் செயல்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

Christine Fair
author img

By

Published : Oct 30, 2019, 9:33 PM IST

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவருபவர் கிறிஸ்டின் ஃபேர். கருத்தரங்கம் ஒன்றில் பேசிய இவர், "சொல்லப்போனால் பாகிஸ்தான் ராணுவம்தான் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. அதனால்தான் அவர்களைக்(லஷ்கர்-இ-தொய்பா) கட்டுப்படுத்துவதில் பெரும் சாவல் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் லஷ்கர்-இ-தொய்பா, பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-க்கு மிகச் சிறந்த பிரதிநிதியாகவே லஷ்கர்-இ-தொய்பா செயல்படுகிறது" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது குறித்துப் பேசிய அவர்," ஜனநாயகத்தை நான் நம்புகிறேன், ஆகவே என்னைப் பொறுத்தவரைச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது சரிதான்" என்றும் அவர் தெரிவித்தார்.

இவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைப் பற்றி 'In Their Own Words: Understanding Lashkar-e-Taiba' என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ட்ரம்ப்புக்கு காலம் சொல்லப்போகும் பதிலென்ன!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.