அமெரிக்காவின் ஸ்பாட்டடு இன ஆந்தைகளின் எண்ணிக்கை வடமேற்கு பசிபிக் பகுதியில் பெருமளவு குறைந்தது. ஸ்பாட்டடு ஆந்தைகள் பெருமளவு குறைந்ததால், அவை அழியும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கிழக்கு கடற்கரை பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட பேர்ரெட் ஆந்தை (Barred owl) பூர்வீக ஆந்தை இனமான ஸ்பாட்டட் ஆந்தைகள் வாழ்விடத்தில் பெருமளவு பெருகியுள்ளது தெரியவந்தது.
ஆக்ரோஷமான இயல்புடைய பேர்ரெட் ஆந்தைகள் ஸ்பாட்டட் ஆந்தைகளின் இருப்பிடத்தையும் உணவுகளையும் கைப்பற்றிக் கொள்வதால், ஸ்பாட்டட் ஆந்தைகளால் அவ்விடங்களில் வாழ முடியாமல்போனது. இதனால் அமெரிக்க அரசு, சோதனை முயற்சியாக ஸ்பாட்டட் ஆந்தைகளை கொல்லும் முயற்சியை மேற்கொண்டது.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பரிசோதனை முயற்சியில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட பேர்ரெட் ஆந்தைகளை கொல்லப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க உயிரியலாளர் ராபின் பவுன் கூறுகையில், "ஆந்தைகளை கொல்வதற்கு நாங்கள் ஒரு வழிமுறையை பின்பற்றுகிறோம். இதன்மூலம் ஆந்தைகளுக்கு வழியில்லாத உடனடி மரணம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது" என்றார்.
இந்தப் பரிசோதனை முயற்சியில் ஸ்பாட்டட் ஆந்தைகளின் எண்ணிக்கை உயர்வது கண்டுபிடிக்கப்பட்டால், இத்திட்டத்தை மேலும் விரிபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒருபுறம் இத்திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்திருந்தாலும், மறுபுறம் விலங்குநல ஆர்வலர்களும் சூழலியலாளர்களும் ஆந்தைகளை கொல்லும் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்க அழகி
!