அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஜனநாயகக் கட்சியின் செனட்டரான கமலா ஹாரிஸ், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இந்திய வம்சாவளியான இவருக்கு, இந்தியாவிலும் ஆதரவுக் குரல் அதிகரித்துவருகிறது.
இவரின் தாய் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவராவார். இதனால், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ஆறு மாதத்தில் சுமார் ரூ. 160 கோடி நிதியை திரட்டியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடேன், இவருக்கு அதிபர் தேர்தலில் மிகப் பெரிய சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது.