ETV Bharat / international

'இது ரொம்ப தவறான செயல்' - அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா - அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

பெய்ஜிங்: சீனா உரிமை கோரும் தைவான் நாட்டின் மேல் அமெரிக்க ராணுவ விமானம் பறந்ததற்கு சீனா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

Xi Jinping
Xi Jinping
author img

By

Published : Jun 13, 2020, 3:56 PM IST

சீனாவின் தென் கிழக்கு பகுதியிலுள்ள தைவானில் சுயாட்சி இருக்கும்போதும், அது தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்றே சீனா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன் அமெரிக்காவின் போயிங் 737 ராணுவ விமானம் தைவானின் வான்வெளியில் சென்றது.

இது குறித்து தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க ராணுவ விமானம் உரிய அனுமதியுடன்தான் தைவான் நாட்டின் வான்வெளியில் நுழைந்தது. அமெரிக்க ராணுவ விமானம் எந்தவொரு தைவான் விமான நிலையத்திலும் தரையிறங்கவில்லை. அதற்கான அனுமதியையும் நாங்கள் அளிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான அந்த விமானம் ஜப்பானிலுள்ள கடேனா என்ற விமான தளத்திலிருந்து, தாய்லாந்து நாட்டிற்கு சரக்குப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வழக்கமான விமானம். சில காரணங்களால் அந்த விமானம் தைவான் நாட்டின் வான்வெளியை பயன்படுத்திச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா கூறிவந்தாலும், அரசியல் ரீதியாக சீனாவிலிருந்து தைவான் விலகியே உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களே தைவானில் ஆட்சி செய்கின்றனர். தனது வான்வெளியை முற்றிலும் தைவான் நாடே நிர்வகிக்கிறது.

இருப்பினும், அமெரிக்காவின் இச்செயலுக்கு சீனா கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து சீனாவின் தைவான் விவகாரத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க ராணுவ விமானத்தின் செயல் எங்கள் இறையாண்மை, பாதுகாப்பு, உரிமை ஆகியவற்றுக்கு களங்கம் விளைவித்துள்ளது. மேலும் சர்வதேச சட்டத்தையும், விதிமுறைகளையும் அமெரிக்கா மீறியுள்ளது.

இது ஒரு சட்டவிரோத செயல். இப்பகுதியில் தேவையின்றி பதற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவத்தை அமெரிக்கா நடத்தியுள்ளது. இது குறித்து, நாங்கள் கடுமையான அதிருப்தியையும் உறுதியான எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம்.

தைவான் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் பறந்துள்ளது. அந்தச் சமயத்தில் அமெரிக்க ராணுவ விமானத்தை, வேறெந்த விமானமும் வழிமறைக்கவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ முயலவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ராணுவ விமானம் தைவான் நாட்டிற்கு மேல் பறந்த அதே நாளில், பல சீன போர் விமானங்கள் தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் வான்வெளியில் நுழைந்துள்ளன. அந்த விமானங்களுக்கு தைவான் நாட்டு ராணுவம் எச்சரிக்கை சமிக்ஞைகளையும் அனுப்பியுள்ளது.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே இருக்கும் சிறிய கடல் பகுதியில் தைவான் நாட்டின் எதிர்ப்பை மீறி, சீன ராணுவம் அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபடும். சமீப நாள்களாக இதே பகுதியில் அமெரிக்காவின் போர் கப்பல்களுக்கும் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

தைவானுக்கும், சீனாவுக்கும் எவ்வித ராஜதந்திர உறவும் இல்லை என்றாலும் தைவான் நாட்டின் பெரும்பாலான ராணுவத் தளவாடங்கள் அமெரிக்காவிடமிருந்தே வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க ட்ரம்ப் திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.