ETV Bharat / international

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்! - கரோனா தடுப்பூசி போடும் பணி

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் நாளை(டிச.14) முதல் மக்களுக்குப் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசர்
ஃபைசர்
author img

By

Published : Dec 13, 2020, 12:47 PM IST

கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் நாளை(டிச.14) முதல் மக்களுக்குப் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்குத் தடுப்பூசி விநியோகம் செய்யும் பணி நாளை(டிச.14) முதல் தொடங்கப்படவுள்ளது.

டிசம்பர் 14ஆம் தேதி, 145 இடங்களிலும்; டிசம்பர் 15ஆம் தேதி 425 இடங்களிலும்; டிசம்பர் 16ஆம் தேதி 66 இடங்களிலும் தடுப்பூசி விநியோகம் செய்யப்படவுள்ளது. முன்னதாக, டிசம்பர் 11ஆம் தேதி, ஃபைசர் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

அந்த அனுமதியானது, 16 வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்து கலாமாசூ, மிச்சிகன் ஆகிய மாகாணங்களுக்கு முதற்கட்டமாக இன்று(டிச.13) வழங்கப்படவுள்ளது.

பிரிட்டன், பஹ்ரைன், கனடா, சவூதி அரேபியா, மெக்சிகோ ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவும் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்தபடியாக, ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.