ETV Bharat / international

அமெரிக்க விமானப் படையில் நெற்றியில் திலகமிட இந்தியருக்கு அனுமதி! - Darshah Shah tilak in uniform

அமெரிக்க விமானப் படையில் பணியாற்றிவரும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ராணுவ வீரருக்கு சீருடையில் இருக்கும்போதே நெற்றியில் குங்கும திலகமிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Shah
Shah
author img

By

Published : Mar 22, 2022, 7:11 PM IST

டெல்லி : இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் தர்ஷன் ஷா (Darshan Shah). இவர் அமெரிக்காவின் விமானப் படையில், வயோமிங் (Wyoming) பகுதியில் உள்ள ஃஎப்இ வாரன் விமான படைத் தளத்தில் விமான படை வீரராக பணியாற்றிவருகிறார்.

இவர் சீருடையில் பணியாற்றும்போதே, நெற்றியில் திலகம் அணிந்துக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. தர்ஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த மதச் சலுகை, உலகம் முழுக்க அதிவேகமாக பரவிவருகிறது.

பலரும் தர்ஷனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இது குறித்து தர்ஷன் ஷா கூறுகையில், “நான் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றார். தொடர்ந்து, “இதுபோன்ற நிகழ்வுகள் நாங்கள் பார்த்திராதது என்று உறவினர்களும் தனக்கு ஆசிர்வாதம் வழங்கினார்கள்” என்றார்.

'தமிழ்நாட்டில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல தடை இல்லை என முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' - ஜவஹிருல்லா

தொடர்ந்து அவர் கூறுகையில், “திலகத்தை நெற்றியில் அணிவது சிறப்பு. வாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை கடந்து செல்வது எனது வழி. இது எனக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது. இது எனக்கு நிறைய சிறந்த நண்பர்களையும், இந்த உலகில் நான் யார் என்பதைப் பற்றிய ஒட்டுமொத்த புரிதலையும் கொடுத்துள்ளது.

நாங்கள் விரும்புவதை நடைமுறைப்படுத்தவும், நம்பிக்கை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படும் நாட்டில் நாங்கள் வாழ்கிறோம். இது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதுதான் இந்த நாட்டை இவ்வளவு பெரிய நாடாக மாற்றுகிறது. நாம் எதைப் பின்பற்றுகிறோம் அல்லது நம்புகிறோம் என்பதற்காக நாங்கள் துன்புறுத்தப்படுவதில்லை. இந்த நாட்டுக்கு நான் விஸ்வாசமாக இருக்கிறேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது இது” என்றார்.

இதையும் படிங்க : பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடை செல்லும் - கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.