அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்பை வீழ்த்திய ஜோ பைடன், நிர்வாக குழுக்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். அடுத்த மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இந்தியாவை பூர்வீகமாக உடைய பலரை, அவரின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் நியமித்துவருகிறார். துணை அதிபராக, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்.
அதுமட்டுமின்றி, கரோனா தடுப்பு சிறப்பு குழுவின் துணை தலைவராக டாக்டர் விவேக் மூர்த்தி, வெள்ளை மாளிகையின் ஓ.எம்.டி., எனப்படும் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குனராக நீரா டான்டன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் டிஜிட்டல் வியூகத்தின் உறுப்பினர்கள் விவரம் குறித்து பைடன் நேற்று (டிச. 29) அறிவித்தார். இதில் இந்தியாவின் காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷா என்பவருக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது. அவர் டிஜிட்டல் வியூக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிட்டல் வியூக இயக்குனராக ராப் ஃப்ளாஹெர்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயிஷா ஷா சமூக தாக்க தகவல்தொடர்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் நிறுவனமான புவாயில் மூலோபாய தகவல் தொடர்பு நிபுணராக பணியாற்றினார்.
இதையும் படிங்க...பைடனின் கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் இணையும் மூன்று முக்கிய நபர்கள்!