ETV Bharat / international

பைடன் பதவியேற்பு விழா - சில முக்கிய தகவல்கள்! - பைடன் பதவியேற்பு விழா

‘ஒன்றிணைந்த அமெரிக்கா’ என்பதே இந்த ஆண்டின் மையக்கரு என அதிபர் பதவியேற்பு குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 19ஆம் தேதி கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'ஒற்றுமை மற்றும் நினைவூட்டலின் தேசிய தருணம்’ என்ற பெயரில் அனைவரையும் தீபமேற்ற அதிபர் பதவியேற்பு குழு வலியுறுத்தியது.

Inaugural steps of Biden's Presidency
Inaugural steps of Biden's Presidency
author img

By

Published : Jan 20, 2021, 6:35 PM IST

வாஷிங்டன்: கரோனா சூழல், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை நடுவே நடைபெறவுள்ள பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா அமெரிக்க வரலாற்றில் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கப் போகிறது.

‘ஒன்றிணைந்த அமெரிக்கா’ என்பதே இந்த ஆண்டின் மையக்கரு என அதிபர் பதவியேற்பு குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 19ஆம் தேதி கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'ஒற்றுமை மற்றும் நினைவூட்டலின் தேசிய தருணம்’ என்ற பெயரில் அனைவரையும் தீபமேற்ற அதிபர் பதவியேற்பு குழு வலியுறுத்தியது.

பதவியேற்பு விழா தெரிவிப்பது என்ன?

நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றிருந்தாலும், அவர் அந்த நாளே அதிபராக பதவியேற்கவில்லை. அமெரிக்க சட்டத் திருத்தம் 20-இன் படி ஜனவரி 20ஆம் தேதி மதியம்தான் அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸின் பதவிக்காலம் முடியும்.

முன்னதாக மார்ச் 4ஆம் தேதி பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 1933ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம், தேர்தலுக்கும் பதவியேற்புக்குமான காலம் 2 மாதங்கள் என தெரிவிக்கிறது. இந்த காலகட்டத்தில் முன்னாள் அதிபர் தனது மிச்சமுள்ள பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.

பதியேற்புக்கான வழிமுறைகள்:

அதிபராக பொறுப்பேற்கும் முன்பு பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட்ஸ் இந்த பதவியேற்பு விழாவை நிர்வகிப்பார். துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கான பதவியேற்பு நிகழ்வை உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் நிர்வகிப்பார்.

நீதிபதி சோனியா சோடோமேயரை கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுத்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் ஆப்ரிக்க அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தர்கூட் மார்ஷலுக்கு சொந்தமான பைபிளை சத்திய பிரமாணத்தின்போது கமலா பயன்படுத்தவுள்ளார்.

பதவி விலகும் அதிபர் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், அது கட்டாயமல்ல.

ஜெனிபர் லோபஸ், லேடி காகா, டாம் ஹேங்ஸ் உள்ளி பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

பதவியேற்பு முடிந்து ராணுவ அணிவகுப்பை ஆய்வு செய்த பின்னர் பைடனும் கமலாவும் வெள்ளை மாளிகைக்கு செல்வர்.

அமேசான் ப்ரைம், மைக்ரோசாஃப்ட் பிங், பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.

என்ன வித்தியாசத்தை காணப்போகிறோம்?

அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ட்ரம்ப், இந்த பதவியேற்பு விழாவை தவிர்த்துவிட்டு ஃப்ளோரிடா செல்ல இருக்கிறார். பைடன் வெற்றிபெற்றது மோசடி என அவர் குற்றம்சாட்டி வருகிறார். எனினும், துணை அதிபர் பென்ஸ் இந்த விழாவில் பங்கேற்கவிருக்கிறார். வாஷிங்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 21 ஆயிரம் தேசிய பாதுகாப்பு குழுக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கரோனா காரணமாக சில முக்கிய இடங்களில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.