அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துவருகிறது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிட்டுகிறார்.
அவருடன் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய அமெரிக்கரான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை தற்போது சூடுபிடித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் கடுமையான விமர்சனம் செய்துவருகின்றனர்.
ட்வீட் போடுவதன் மூலம் கரோனா வைரசை தடுத்து நிறுத்த முடியாது என ட்ரம்பை சூசகமாக சாடியுள்ள கமலா ஹாரிஸ், ட்ரம்ப் அரசு கரோனாவை கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் ட்ரம்ப் கமாலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என சாடியுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஒரு பெண் அதிபராக வருவதை தான் வரவேற்பதாகவும், அதேவேளை நாட்டின் முதல் பெண் அதிபராக வர கமலா ஹாரிஸுக்கு எந்தவித தகுதியும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹபீஸ் சயீத் ஆதரவாளர்களுக்கு சிறை தண்டனை விதித்த பாக். நீதிமன்றம்!