ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்திற்கு பிரிட்டன், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. அமெரிக்காவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தடுப்பு மருந்தின் மூலம் கரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தக் கரோனா தடுப்பு மருந்தை 21 நாள்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக வழங்க வேண்டும்.
இந்நிலையில், நேற்று (டிச. 14) அமெரிக்காவில் முதல் முறையாக செவிலி ஒருவருக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. 95 விழுக்காடு வரை பலனளிக்கும் இந்தத் தடுப்பு மருந்தை 16 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
-
First Vaccine Administered. Congratulations USA! Congratulations WORLD!
— Donald J. Trump (@realDonaldTrump) December 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">First Vaccine Administered. Congratulations USA! Congratulations WORLD!
— Donald J. Trump (@realDonaldTrump) December 14, 2020First Vaccine Administered. Congratulations USA! Congratulations WORLD!
— Donald J. Trump (@realDonaldTrump) December 14, 2020
தற்போதுவரை அமெரிக்காவில் 1.69 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தடுப்பூசியை இப்போதைக்கு எடுத்துக் கொள்ளப்போவதில்லை - ட்ரம்ப்