ETV Bharat / international

ஹைதி நிலநடுக்கம்: உயிரிழப்பு 304ஆக உயர்வு!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில் நேற்று (ஆகஸ்ட். 14) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 304 பேர் உயிரிழந்துள்ளனர்.

Haiti earthquake
Haiti earthquake
author img

By

Published : Aug 15, 2021, 7:58 AM IST

போர்ட்-ஓ-பிரின்ஸ்: வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில், நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகியது. போர்ட்-ஆப்-பிரின்சிலிருந்து 125 கி.மீ. தொலைவில் இந்த நிலடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 1,800 பேர் காயமடைந்துள்ளனர். பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹைதி நிலநடுக்கச் செய்தியால் தான் கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

இதேபோல, ஹைதியில் 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆகப் பதிவானது. அப்போது லட்சக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.