ஜெனீவாவில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom), கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றைத் தடுக்க புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவப் பரிசோதனை குறித்து பாராட்டியுள்ளார்.
மேலும் அவர், "புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்தை உலக சுகாதார அமைப்பின் அலுவலர்களின் மேற்பார்வையின்கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
'தீவிர கரோனா நோயாளிகளுக்கு இது உதவியாக இருந்தாலும், அதிகாரப்பூர்வமான சிகிச்சை இல்லை' என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் குறிப்பிட்டுள்ளார்.
உலக முழுவதும் நாளுக்கு நாள் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதுவரை இதற்கான மருந்தை கண்டுபிடிக்காவிட்டாலும் இந்தத் தொற்றிலிருந்து விரைவில் நாம் மீண்டுவருவோம். அதற்கான நம்பிக்கையின் பச்சைத் தளிர்கள் இருக்கிறது" எனவும் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினரான இந்தியா!