கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. அதற்கான தடுப்பூசிகளை உலக முன்னணி நிறுவனங்கள் தயாரித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளன. இருநாடுகளிலும், தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
உலகளாவிய கரோனா பாதிப்பு
இந்நிலையில் உலகளவில் இதுவரை ஏழு கோடியே 52 லட்சத்து 99 ஆயிரத்து 669 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 68 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 567ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 76 லட்சத்து 27 ஆயிரத்து 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 17 ஆயிரத்து 929 பேர் உயிரிழந்துள்ளனர்.