சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை எட்டு கோடியே 31 லட்சத்து 43 ஆயிரத்து 254 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 13 ஆயிரத்து 583ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 89 லட்சத்து 40 ஆயிரத்து 412ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 48 ஆயிரத்து 433 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்தனர்.
சர்வதேச நாடுகளின் நிலவரம்
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது. இதுவரை அந்நாட்டில் இரண்டு கோடியே 02 லட்சத்து 16 ஆயிரத்து 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 778 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
சீனாவில் அந்நாட்டு அரசு அவசர பயன்பாட்டிற்காக தடுப்பூசி பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மியான்மர் நாட்டில் வரும் ஜனவரி இறுதிவரை சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாம் எலிசபெத்தின் கௌரவப் பட்டியலில் இடம்பெற்ற இந்திய மருத்துவர்