சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை எட்டு கோடியே 16 லட்சத்து 96 ஆயிரத்து 394 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 82 ஆயிரத்து 111ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 78 லட்சத்து 34 ஆயிரத்து 932ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்து 889 பேர் உயிரிழந்தனர்.
சர்வதேச நாடுகளின் நிலவரம்
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 97 லட்சத்து 81 ஆயிரத்து 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 43 ஆயிரத்து 182 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பாதிப்பு எண்ணிக்கையில் நான்காம் இடத்தில் ரஷ்யா, ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. இலங்கையில் தொற்று கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி கிடைக்கும்வரை ஓய்வு இல்லை - உலக சுகாதார அமைப்பு