சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை ஏழு கோடியே 83 லட்சத்து 90 ஆயிரத்து 945 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 24 ஆயிரத்து 496ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 51 லட்சத்து 54 ஆயிரத்து 878ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆறு லட்சத்து 72 ஆயிரத்து 787 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 367 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாடுகளின் நிலவரம்
உலகளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2 லட்சதுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 824 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்கண்ட புள்ளிவிவர கணக்கின் படி, ஒவ்வொரு 33 நொடிகளுக்கு அந்நாட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பாதிப்பு எண்ணிக்கையில் நான்காம் இடத்தில் ரஷ்யா, ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இதையும் படிங்க: தடுப்பூசி வந்தாலும் கவனம் தேவை; அமெரிக்க மக்களை எச்சரிக்கும் ஜோ பைடன்