சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை ஏழு கோடியே 71 லட்சத்து 72 ஆயிரத்து 373 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 99 ஆயிரத்து 644ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 680ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து லட்சத்து 21 ஆயிரத்து 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாயிரத்து 179 பேர் உயிரிழந்தனர்.
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 82 லட்சத்து 67 ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
பிரிட்டன் நாட்டில் புதிய வகை கோவிட் வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் நிலவுவதால், அந்நாட்டிற்கு பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையை இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. மேலும், தென் கொரியாவில் பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு தலைநகரில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட 330 நைஜீரியா மாணவர்கள் விடுவிப்பு