கரோனா ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை மெல்ல மீண்டு வரும் நிலையிலும், கரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதுவரை ஆறு கோடியே 30 லட்சத்து 83 ஆயிரத்து 565 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 65 ஆயிரத்து 309ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 35 லட்சத்து 52 ஆயிரத்து 242ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து லட்சத்து 26 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாயிரத்து 763 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக கரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 37 லட்சத்து 50 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியிலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 63 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பும் 1.72 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 10 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்க ரஷ்யா ஒப்புதல்