கோவிட்-19 தொற்று சீனாவில் கண்டறியப்பட்டாலும் அதன் மைய பகுதியாக தற்போது ஐரோப்பா நாடுகளும், அமெரிக்காவும் மாறிவிட்டன. இதனால், பல நாடுகளிலும் மக்கள் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மிகவும் எளிதாக பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக 84 ஆயிரத்து 285 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து 20 லட்சத்து 83 ஆயிரத்து 304ஆக அதிகரித்துள்ளது. அதில் 5 லட்சத்து 16 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம், இத்தொற்றால் நேற்று சிகிச்சை பலனின்றி 7 ஆயிரத்து 908 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 616ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 28 ஆயிரத்து 529 பேரும், இத்தாலியில் 21 ஆயிரத்து 645 பேரும், ஸ்பெயினில் 18 ஆயிரத்து 812 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இத்தொற்றால் இதுவரை 12 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 414 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணப் பொருட்களில் என் பெயர் இருக்கணும் - ட்ரம்ப் உத்தரவு