திருமணம் என்றாலே மக்கள் மனதில் தோன்றுவது விதவிதமான கல்யாண சாப்பாடு தான். அவ்வாறு வெளிநாட்டில் சாப்பிடப் போன கல்யாண விருந்தில் தான் சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தை ரெடிட் என்னும் சமுக வலைத்தளத்தில் எழுதிய பெண் மக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளார். அந்த பெண் கூறியது, நானும் எனது 16 வயது மகனும் திருமண விழாவிற்குச் சென்றிருந்தோம். அங்குத் திருமண விருந்தில் பெரியவர்களுக்கு, சிறியவர்களுக்கு என தனித்தனியாக உணவு பரிமாறியுள்ளனர். தனது மகனுக்கு 16 வயது ஆனதால் அப்பெண் பெரியவர்கள் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்து சாப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: மேக்கப் இல்லாம முகத்தைப் பார்க்க தில் இருக்கா? ஃபில்டர் இல்லாமலும் அழகு குறையாத நடிகை!
அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், உங்கள் மகன் சிறியவர்கள் உணவைச் சாப்பிடாமல் பெரியவர்கள் உணவைச் சாப்பிட்டுவிட்டார். 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே உணவைச் சாப்பிட அனுமதி அளித்திருந்தது. இச்செயலால் கெட்டரிங் ஊழியர்கள் எங்களிடம் அதிகமாகப் பணம் வாங்கிவிட்டார்கள். அதனால் சாப்பாட்டிற்கான பில்லை வீட்டிற்கு அனுப்பியுள்ளோம் அதில் குறிப்பிட்டுள்ள பணத்தைத் திருப்பி அனுப்புமாறு கூறப்பட்டு இருந்தது.இச்சம்பவம் தற்போது சமுக வலைத்தளத்தில் வைராலாகி வருகிறது.