உலகில் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தும் பாரிய கந்தக அமில மேகங்களை உருவாக்க முடியுமா என்ற கேள்வி பலரின் மனதில் தோன்றிய நிலையில், அது சாத்தியம் என்று கனடாவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாரிஸில் நிர்ணயிக்கப்பட்ட மட்டங்களில் புவி வெப்பமடைதலைத் தக்கவைக்க ஒவ்வொரு ஆண்டும் புவிசார் பொறியியல், காலநிலை தலையீட்டின் நுட்பத்தை சரிசெய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ரட்ஜர்ஸ் பல்கலைக்கழத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் அறிவியல் துறையை சேர்ந்த இணை ஆசிரியர் ஆலன் ரோபோக் கூறுகையில், "உலகில் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்து முழுமையாக போராடுவதற்கான எந்த ஒரு தொழில்நுட்பமும் கிடையாது என்பது தெளிவாக தெரிகிறது. அதைக் கட்டுப்படுத்த எரிபொருளை எரிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். அதே போல், காற்று மற்றும் சூரிய சக்தியை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். தற்போது, புவி வெப்பமடைதல், புவிசார் பொறியியல் காட்சிகளை நிவர்த்தி செய்யும் ஒரே ஒரு காலநிலை மாதிரியுடன் மட்டும் தான் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவுகளின் தன்மையை சரிபார்க்க இன்னும் சில ஆய்வுகள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் ரட்ஜர்ஸ் ஆராய்ச்சி விஞ்ஞானி லில்லி சியா, வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையம், கார்னெல் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம், போல்டர், உட்ரெக்ட் பல்கலைக்கழகம் உட்பட பல மையத்தின் ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு உள்ளது.