ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸ் நவல்னியை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவரும், அவரது ஆதரவாளர்களும் முறையற்ற வகையில் போராட்டங்கள் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு ஜி-7 நாடுகள் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கூட்டாக நவல்னி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அரசியல் நோக்கம் கொண்டு நடைபெற்ற இந்த கைது நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான நவல்னியை விஷம் கொடுத்து கொலை செய்யும் முயற்சி அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து, ஜெர்மனி நாட்டில் உயர் சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்து நாடு திரும்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் தான் நாட்டின் முன்னேற்றம் உள்ளது...!