ETV Bharat / international

ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டதாம்! - கரோனா ஜார்ஜ் ஃப்ளாய்ட்

வாஷிங்டன்: அமெரிக்காவில் படுகொலைசெய்யப்பட ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News
author img

By

Published : Jun 4, 2020, 4:45 PM IST

அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் சிக்கி ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின அமெரிக்கர் உயிரிழந்தார். இந்த விவகாரம் அந்நாட்டையே உலுக்கிவருகிறது.

ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கேட்டும், நிறவெறிக்கு எதிராக முழக்கம் எழுப்பியும் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நோய் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் தென்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்த காரணம் குறித்து ஹெனிபின் மாவட்ட மருத்துவ பரிசோதகரின் அலுவலகம் வெளியிட்டுள்ள 20 பக்க உடற்கூறாய்வு அறிக்கையில், உயிரிழப்பதற்கு முன்பாக ஃப்ளாய்டின் நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : மீண்டும் பரிசோதனையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.