அமெரிக்காவில் புதிய பட்டதாரிகளின் எதிர்காலத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை யூடியூப் நடத்திய “Dear Class of 2020” விர்சுவல் விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அதில், "பல ஆண்டுகளாக அமெரிக்காவில் மறைமுகமாக இருந்த பல பிரச்னைகளை கரோனா வைரஸ் வெளிச்சத்திற்கு எடுத்து வந்துள்ளது. குறிப்பாக நாட்டில் பொருளாதார சமத்துவமின்மை இல்லாதது, மில்லியன் கணக்கான மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பல பிரச்னைகள் மக்களின் பார்வைக்கு வந்துள்ளன.
வாழ்க்கை எப்போதுமே நிச்சயமற்றதாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் எந்த வகையான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை விட, நீங்கள் எந்த வகையான நபராக வாழ்க்கையில் இருக்க போகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டிய தருணம் இது" என அறிவுரை வழங்கினார்.
இதே போல் விழாவில் பங்கேற்ற பியோனஸ், லேடி காகா, டாம் பிராடி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது வார்த்தைகள் மூலம் புதிய பட்டதாரிகள் மனதில் நம்பிக்கை விதைத்துள்ளனர்.