ETV Bharat / international

'மனஉறுதி - அமைதி பகவத் கீதையில் இருந்து கிடைக்கிறது' - அமெரிக்க இந்து எம்.பி. துளசி! - அமெரிக்கா இந்து எம் பி

வாஷிங்டன்: கரோனா காலத்தை எதிர்நோக்க மனஉறுதியும் அமைதியும் பகவத் கீதையில் இருந்து கிடைப்பதாக, அமெரிக்க இந்து நாடாளுமன்ற உறுப்பினர் துளசி கப்பார்ட் கூறியுள்ளார்.

tulsi-gabbard
tulsi-gabbard
author img

By

Published : Jun 14, 2020, 6:28 PM IST

அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 லட்சத்தைத் தாண்டி, உயர்ந்து கொண்டிருக்க, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது.

மறுபுறம் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதிற்கு எதிராக இனவெறி ஒழிப்புப் போராட்டத்தில், அந்நாட்டு மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்படி கரோனா உயிரிழப்பு, இனவெறி ஒழிப்புப் போராட்டங்கள் என அமெரிக்காவில் நிலவும் அனல் பறக்கும் சூழ்நிலைக்கு மத்தியில், "நாளை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால், அதை எதிர்நோக்கத் தேவையான மனவலிமை, மனஉறுதி, அமைதியை பகவத் கீதையில் இருந்து பெறலாம் என்று அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இந்து நாடாளுமன்ற உறுப்பினர் துளசி கப்பார்ட் (39) கூறியுள்ளார்.

இந்து மாணவர்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் மாணவர்களுக்கு காணொலி அழைப்பின் மூலம் உரையாற்றிய துளசி, 'ஒருபக்கம் கரோனா; மறுபக்கம் இனவெறிக்கு எதிரானப் போராட்டம். இந்தப் பரபரப்பான நேரத்தில், மனதிற்கு வலிமை, உறுதி, அமைதி ஆகியவற்றை பக்தி, யோகா, கர்ம யோகா உள்ளிட்ட இடங்களில் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் கூறுகிறார்' என அவர் மாணவர்களுக்குத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேசிய கீதத்தை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.