ETV Bharat / international

இறுதிக்கட்ட சோதனைக்கு ஜூலையில் களமிறக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள்!

நியூயார்க் : கோவிட்-19க்கு எதிராக அமெரிக்கா உருவாக்கி உள்ள முதல் தடுப்பூசி அடுத்த மாதத்தில் லத்தீன் அமெரிக்காவில் சோதனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்ட சோதனைக்கு ஜூலையில் களமிறக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள்

author img

By

Published : Jun 13, 2020, 11:12 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறிருக்கும் கரோனா பெருந்தொற்றுநோயால் இதுவரை 77 லட்சத்து 65ஆயிரத்து 922 பேர் பாதிக்கப்பட்டும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 753 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மக்களின் அன்றாட வாழ்வையே புரட்டிப்போட்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க நோய்த்தடுப்பூசி மட்டுமே தீர்வென நம்பி உலக நாடுகள், தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிக்க மிகத் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய நாடுகள் தங்களது ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைகள் மூலமாக இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சர்வதேச அளவில், தற்போது 120 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 மருந்துகள், மனிதர்களிடையே விரைவில் சோதனை செய்துபார்க்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. ஏற்கனவே சீனாவின் தடுப்பூசி பிரேசில் போன்ற நாடுகளில் பரிசோதனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்போது அமெரிக்காவின் தடுப்பூசிகள் சோதனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறையின் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை தயாரிக்க மாடர்னா இன்க், அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி மற்றும் ஃபைசர் இன்க், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மெர்க் & கோ இன்க் ஆகிய 5 நிறுவனங்களைத் தேர்வு செய்திருந்தார்.

அந்த ஐந்து நிறுவனங்களில் ஒன்றான அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனை நடத்த பிரேசில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள், கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு தேவையான மூல மருத்துவப் பொருள்களை பிரான்ஸ் மருந்து நிறுவனங்களான சனோஃபி, நோவாவெக்ஸ் இன்க், இனோவியோ பாமசியேட்டிக்கல்ஸ் இன்க் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஐந்து நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கு தேவையான கூடுதல் நிதியினை வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. டிரம்ப் அரசு, இந்த மருந்துகளை 20 லட்சம் மக்களிடம் வைத்து சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த சோதனைகள் ஜூலை மாதம் பிற்பகுதியில் தொடங்கும் எனவும் முதற்கட்டமாக மாடர்னா இன்க், அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள மருந்தை அமெரிக்கா சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள ChAdOx1 nCoV-19 மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்ய பிரேசில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த கரோனா தடுப்பு மருந்து இரண்டாம்கட்ட நிலையில் உள்ளது. மூன்றாம் கட்ட சோதனைக்காக, 18 முதல் 55 வயது கொண்ட 30 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் கட்ட சோதனையில் மருந்தின் பாதுகாப்பு, திறன், வைரசின் பல்கிப்பெருகும் திறனை தடுப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்று பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளுக்காக, ஷா பாலோவில் உள்ள பெடரல் பல்கலைகழகம், புதிதாக ஆயிரம் தன்னார்வலர்களை பணியமர்த்த உள்ளது. இந்த மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியாகும் என்றும், இந்த முடிவுகளை பொறுத்து 100 மில்லியன் டோஸ் மருந்தை தயாரிக்க மாடர்னா நிறுவனம் தயாரித்திருக்கும் என்று அலர்ஜி நோயியல் சிறப்பு மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மான்செஸ்டரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ள mRNA-1273 மருந்தின் இரண்டாம் கட்ட சோதனையை கடந்த வாரம் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதிகட்ட ஆய்வை, ஜூலை முற்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சோதனைகளின் முடிவுகள், செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மருத்துவ அகாடமியின் கூட்டத்தில் பேசிய என்.ஐ.எச் தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தை இயக்குநர் மருத்துவர் ஜான் மாஸ்கோலா, "அனைத்தும் சரியாக நடந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் எந்த தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்பதற்கான பதில்களைப் பெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கும்" என்று தெரிவித்தார்.

அமெரிக்கா 'ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு' என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்குள் 300 மில்லியன் டோசேஜ் அளவுகளை கையில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.