குறுகிய காலத்தில் இணைய பயன்பாடு பிரமாண்ட வளர்ச்சி அடைந்தாலும், உலகளவில் சுமார் 3.5 பில்லியன் மக்களுக்கு இணைய சேவை இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் மக்கள் சராசரியாக உபயோகிக்கும் தரவை ஆண்டிற்கு 20 முதல் 30 விழுக்காடு அதிகரிப்பதாக ஆய்வு முடிவு தெரிகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, இணைய பயனர்கள் அதிகரிப்பதால் வேகத்தில் தளர்வு ஏற்பட கூடாத காரணத்திற்காக அதிவேக இன்டர்நெட் ஸ்பீடு தரும் பைபர் கேபிளைஸ் நிறுவும் பணியில் ஃபேஸ்புக் களமிறங்கியுள்ளது.
இதற்காக, Bombyx என அழைக்கப்படும் ரோபோட்டை அறிமுகம் செய்துள்ளனர். இந்த ரோபோட் மின் வயர்களில் நடந்தப்படியே பைபரை நிறுவும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதுதொடர்பாக பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை வழங்க மின் விநியோக மைத்திலிருந்து வரும் மின் வயர்களை பயன்படுத்தி, வீட்டிற்கு தேவையான இணைய சேவையை அதிநவீன வேகத்தில் கிடைக்க திட்டமிட்டுள்ளோம்.
Bombyx ரோபோட் மின் வயர்கள் மீது அமர்ந்தப்படியே பைபர் கேபிள்களை பொறுத்தும் தன்மை கொண்டது. ரோபோட் பயன்படுத்தி கேபிள் நிறுவினால் செலவு இரு மடங்கு குறையும் என கருதப்படுகிறது.
இந்திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் உலக மக்கள் தொகையை விட சில நூறு மீட்டர் அதிகமாக பைபர் கேபிள்களை நிறுவ முடியும். பைபர் கேபிளின் அளவு, எடை குறைவாக உள்ளதால் ஒரு ரோபோட்டினால் குறைந்தப்பட்சம் 1 கிலோ மீட்டருக்கும் மேல் அமைத்திட முடியும்.
மின்சார வையரில் ஃபைபர் நெட்வொர்க் நிறுவினால் மற்றொரு பெரிய நன்மையும் உள்ளது. எலக்ட்ரிக் ஃபீடரைத் தொடரும் ஒரு ஃபைபர் கேபிளின் ஒரு ஃபீடரால் சில ஆயிரம் வீடுகளை அணுக முடியும், அதே சமயம் வளரும் நாடுகளில் ஒரு ஃபீடருக்கு 15 ஆயிரம் வீடுகளையும் அணுக முடிகிறது. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு தான் நடைமுறைக்கு வரும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.