வாஷிங்டன்: அமெரிக்காவின் நாஷ்வெல் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலைப் பொழுதில் கேளிக்கை வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த வாகனம் வெடிபொருள்களால் நிரப்பப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், வெடி விபத்தை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவலர்களும் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது எனத் தெரிவித்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் பெருமளவிலான உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த வெடி விபத்தால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியின் மேயர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெடி விபத்து நடைபெற்ற பகுதியில் எஃப்டிஐ தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இவர்கள் விபத்து தொடர்பான பல முக்கிய குறிப்புகளைக் கைப்பற்றியதையடுத்து, முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவரது வீட்டை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அந்த கேளிக்கை வாகனம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 5 நிமிடங்களுக்கு ஒரு குண்டு... கிறிஸ்துமஸ் அன்று அமெரிக்காவை ஆட்டிவைத்த சம்பவம்!