நாடாளுமன்றத்தின் செனெட் அவையின் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கரோனா தடுப்புப் பணியில் அமெரிக்கா தவறான திசையை நோக்கிச் செல்வதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது தெளிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தற்போது அமெரிக்காவில் நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா நோய் கிருமியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போக்கு மாறாவிட்டால், எதிர்காலத்தில் தினமும் இவ்வெண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டக்கூடும்” என எச்சரித்துள்ளார்.
கோவிட்-19 சோதனை முடிவுகளை சரியாக கணித்து அமெரிக்காவால் வழங்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். 4.5 மில்லியன் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒரு லட்சத்து 50ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கரோனா தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு 2021ஆம் ஆண்டில் கிடைக்கும் வகையில் சோதனைகள் முடிவிடப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.